Sunday, 26 February 2017

'ஈழத்தமிழர் பிரச்சினையை மத்திய அரசு இதனை ஒரு பிரச்சினையாக கருதவில்லை: அன்புமணி பேச்சு

'பசுமை தாயகம்' சார்பில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34-வது கூட்டத் தொடர் குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி 'ஐ.நா. மனித உரிமை பேரவையில் அடுத்தது என்ன?' என்ற கையேட்டை வெளியிட்டார்.
கூட்டத்தில் பா.ம.க. துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம், கவிஞர் காசியானந்தன், பேராசிரியர் சரஸ்வதி, இயக்குனர் கவுதமன் உள்பட பலர் உரையாற்றினர்.
கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு இளைஞர்கள் அழுத்தம் கொடுத்ததன் காரணமாக மத்திய அரசு அடிபணிந்தது.
எனவே ஈழத்தமிழர் பிரச்சினையையும் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல இருக்கிறோம். இது நமது தொப்புள் கொடி உறவுகளின் இனப்படுகொலை ஆகும். இன்னும் அங்கு பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் திருப்பிக் கொடுக்கப்படாமல் உள்ளன.
1½ கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க முடியாதா? முடியும், ஆனால் மத்திய அரசு இதனை ஒரு பிரச்சினையாக கருதவில்லை. எனவே, இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஐ.நா. மனித உரிமை சபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...