Monday, 29 May 2017

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை


சியோல், மே 29 அய்.நா.சபை மற்றும் உலக நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத் தாமல் வடகொரியா மீண்டும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையிலான ஏவு கணையை பரிசோதனை செய்துள் ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.வடகொரியா தொடர்ந்து அணு குண்டு சோதனை, ஏவு கணை சோதனை நடத்தி வரு கிறது. தென்கொரியா, அமெரிக்கா மற்றும் அய்.நா.சபை கடும் எச்சரிக்கை மற்றும் பொருளாதார தடை விதித்தும் கண்டு கொள்ள வில்லை. இதனால் கொரிய தீப கற்ப கத்தில் போர் பதட்டம் ஏற்பட் டுள்ளது. இதற்கிடையே தென் கொரியாவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. புதிய அதிபராக மூன் ஜெ-இன் பதவி ஏற்றார். தகுந்த நேரம் வரும் போது வட கொரியா சென்று அதன் தலைவர் கிம் ஜாங்-யங்கை சந்திப்பேன் என்று அறிவித்தார். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான பதட்டம் குறை யும் என எதிர் பார்க்கப்பட்டது. அதை பொய் யாக்கும் விதத்தில் வடகொரியா தொடர்ந்து ஏவு கணைகளை பரிசோதித்து வரு கிறது.அந்நாட்டு நேரப்படி காலை 7.30 மணியளவில் தெற்கு கடற்பகுதியில் சிறிய ரக அணு ஆயுதங்களை சுமந்து 450 கிலோ மீட்டர் வரை செல்லும் ஏவு கணையை பரிசோதித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. குறுகிய கால இடைவெளியில் சுமார் மூன்று ஏவுகணைகளை அந்நாடு பரிசோதித்துள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.வடகொரியா ஏவுகணை பரிசோதனை செய்த கொஞ்ச நேரத்திலேயே, தென்கொரிய அதிபர் மூன் ஜெ-இன் தலைமையிலான அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.  வடகொரியாவின் இந்த செயல் அய்.நா. விதிமுறைகளை மீறு வதை காட்டுகிறது என ஜப்பான் காட்டமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.வடகொரியா ஏவுகணை தொடர்பாக வெள்ளை மாளி கையில் அதிபர் டிரம்ப்-க்கு சில விளக்கங்கள் பாதுகாப்பு துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள தாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளன.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...