Tuesday, 30 May 2017

இலங்கையில் வெள்ளத்தின் போது ஹெலிகாப்டரில் குழந்தை பெற்றெடுத்த பெண்


கொழும்பு: இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு, விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் குழந்தை பிறந்துள்ளது. இலங்கையில் வெள்ளத்தில் சிக்கி ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட, 19 வயது நிறைமாத கர்ப்பிணி பொண்ணுக்கு நடுவானில் குழந்தை பிறந்தது. இலங்கையில் சமீபத்தில் பெய்த கனமழை கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதில் ஏற்பட்ட வெள்ளத்தில் 177 பேர் இறந்துள்ளனர். 104 பேரை காணவில்லை. 75 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ரத்னபுரா மாவட்டத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணுக்கு தான் ஹெலிகாப்டரில் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் இரத்தினபுரி பிரதான வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...