இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிகப்படும் சல்மான் அபேதியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவருக்கு வயது 22.
இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில், நேற்று அமெரிக்க பாப் பாடகி அரினா கிராண்டியின் இசைக் கச்சேரி நடைபெற்றது. அப்போது திடீரென சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. தற்கொலைப்படைத் தாக்குதல் மூலம் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் குண்டை வெடிக்கச் செய்த தீவிரவாதி உள்பட 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்த நிலையில், குண்டு வெடிப்பிற்கு காரணம் என்று சந்தேகிகப்படும் சல்மான் அபேதி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவருக்கு வயது 22. மான்செஸ்டர் பகுதியில் அபேதி 1994-ம் ஆண்டு பிறந்தார். லிபியாவைச் சேர்ந்த அவரது குடும்பம் லண்டனிற்கு அகதியாக வந்து குடியேறியுள்ளது. சல்போர்டு பல்கலைக்கழகம், அபேதி ஒரு மாணவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் சமீபத்தில் அபேதி லிபியா சென்று வந்திருப்பது தெரியவந்துள்ளது. குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இங்கிலாந்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தெருக்களில் ராணுவப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment