லண்டன்: லண்டன் பாலத்தில் வேன் தாறுமாறாக ஓடியதில் 2 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது தீவிரவாதிகளின் தாக்குதல் என கூறப்படுகிறது. உலக புகழ்பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தாறுமாறாக ஓடி பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதனால் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தையடுத்து போலீசார் தற்காலிகமாக லண்டன் பாலத்தை மூடியுள்ளனர்.இச்சம்பவத்தில் 3 பேர் தொடர்புடையதாகவும் அவர்கள் ஆயுதங்களுடன் இருக்கலாம் எனவும் லண்டன் போலீசார் சந்தேகிக்கின்றனர். மற்றொரு சம்பவம் லண்டனில் உள்ள பிரப் மார்கெட் பகுதியில் தீவிரவாதிகள் அங்கிருந்த பொதுமக்களை கத்தியால் மிரட்டினர். சிலர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் கத்து குத்துப்பட்டு 2 பேர் பலியாகியுள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். இது தீவிவாதிகளின் தாக்குதல் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த அவசர கூட்டத்தைகூட்டியுள்ளார். டிரம்ப் பேட்டி லண்டன் சம்பவம் பெரும் வருத்தமளிக்கிறது. அவர்களுக்கு வேண்டிய உதவியை அமெரிக்கா செய்யும். இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க வெளிநாட்டு பயணிகளுக்கான தீவிர கட்டுப்பாடு தேவை என கூறினார்.
No comments:
Post a Comment