வாஷிங்டன்: லண்டனில் கடந்த சனிக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர், 48 பேர் படுகாயம் அடைந்தனர். வேனை வைத்து மோதியும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்திய தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் வலைத்தளம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் நேற்று முன்தினம் வாஷிங்டன் நகரில் நடந்த பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிரம்ப் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அதில் பேசிய அவர் "லண்டனில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு உயிர் இழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் அப்பாவி உயிர்கள் மீது போர் தொடுக்கும் தீயவர்களிடம் இருந்து நமது நாட்டையும் நமது நட்பு நாடுகளையும் பாதுகாக்க நாம் களத்தில் இறங்க வேண்டும் என்றும் நாட்டின் அதிபர் என்ற முறையில், நமது நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க தேவையான எதையும் நான் செய்வேன் என்றும் உறுதி அளித்துள்ளார்.
No comments:
Post a Comment