Monday, 5 June 2017

சவூதி அரேபியா நாட்டிற்கு விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியது கத்தார் விமான நிறுவனம்

கத்தார் விமான நிறுவனம் சவூதி அரேபியா நாட்டிற்கு விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இருநாடுகளுக்கு இடையே நிலவும் தூதரக பிரச்சனை தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஐந்து அரேபிய நாடுகள் கத்தார் நாட்டுடனான தூதரக உறவை முறிந்துக் கொண்டுள்ளது.

கத்தார் அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ். போன்ற பயங்கரவாத இயக்கத்திற்கு துணை நிற்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. கத்தார் அரசு பயங்கரவாதத்திற்கு உதவிசெய்கிறது என்ற குற்றச்சாட்டு நீடித்த நிலையில் 5 நாடுகள் அந்நாட்டுடனான உறவுகளை துண்டித்தது.

இதையடுத்து கத்தார் விமான நிறுவனம் சவூதி அரேபியா நாட்டிற்கு விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...