அமெரிக்காவின் மிஸ்ஸிசிப்பி மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒரு பாதுகாவலரும் அடங்குவார்.
இந்த சம்பவம் குறித்து மிஸ்ஸிசிப்பி போலீஸ் தரப்பு, 'மிஸ்ஸிசிப்பியின் லிங்கன் கவுன்டியில் இருக்கும் மூன்று தனித்தனி வீடுகளில் இந்த துப்பாக்கிச்சூடு சனிக்கிழமை இரவு நடந்துள்ளது. சம்பவம் நடந்த மூன்று இடங்களிலும் போலீஸ் தரப்பில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் மேல் எந்த ஒரு வழக்குப்பதிவும் இதுவரை செய்யப்படவில்லை. ஏனென்றால், கொலைகளுக்கான உண்மை முகாந்திரம் என்னவென்று தற்சமயம் தெரியாத நிலையில் வழக்குப்பதிவு செய்யவில்லை.' என்று சம்பவத்தை அடுத்து நடைபெற்ற விஷயங்களைப் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

No comments:
Post a Comment