Saturday, 27 May 2017

அமெரிக்கர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்: முதல் பட்ஜெட் குறித்து அதிபர் டிரம்ப் பேச்சு


வாஷிங்டன்: அமெரிக்கர்களுக்கு லட்சக்கணக்கான வேலை வாய்ப்பை தமது முதல் பட்ஜெட் உருவாக்கும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதியளித்துள்ளார். வாஷிங்டன்னில் அளித்த வாரந்திர உறையில் பொருளாதார மந்த நிலையை போக்கி புதிய அமெரிக்காவிற்கான அடிதளத்தை அந்த பட்ஜெட் அமைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க குடிமக்களுக்கு லட்சக்கணக்கில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே தமது லட்சியம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

பட்ஜெட்டில் சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ துறை, நிதி ஒதுக்கீடு குறைக்கப்படமாட்டாது என அவர் உறுதியளித்துள்ளார். பொருளாதார வளர்ச்சி மிக முக்கியமான அம்சம் என்று குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் பாதுகாப்பு இல்லாமல் அதை அடைவது கடினம் என கூறினார். தமது முதல் பட்ஜெட் மூலம் அமெரிக்க மக்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும் என டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். அதை உறுதிப்படுத்துவது போல தமது முதல் பட்ஜெட் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...