Tuesday, 23 May 2017

பிரேசில்: நூறாவது பிறந்த நாள் கொண்டாடும் இரட்டை சகோதரிகள்


ரியோ டி ஜெனீரோ, மே 23- பிரேசில் நாட்டில் கரியா சியா பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் மரியா பிக்னேடன் பான்டின், பவுலினா பிக்னேடன் பான்டின்.இவர்களுக்கு நூறு வயது ஆகிறது. அதையொட்டி வரு கிற 24-ஆம் தேதி விழாவை மிக சிறப்பாக கொண்டாட திட்ட மிட்டுள்ளனர்.அதற்கு முன்பு இருவரும் ஒன்றாக இருப்பது போன்று போட்டோக்கள் எடுத்துக் கொண்டனர். கமீலா லீமா என்ற நிழற்படக் கலைஞர் (போட்டோ கிராபர்) இருவரையும் பலவித கோணங்களில் படம் எடுத்தார்.இரட்டை சகோதரிகள் வெளிர் சிகப்பு மற்றும் நீலநிற பாவாடையும், பூப்போட்ட கவுனும் அணிந்து இருந்தனர். பூ கிரீடமும் அணிந்தபடி எலக்ட்ரிக் வெளிர் சிகப்பு நிற காருடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.அந்த படங்களை போட்டோ கிராபர் கமீலா லீமா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கிடையே இரட்டை சகோதரிகள் தங்களது பிறந்த நாளை பெரிய விருந்துடன் அமர்க்களமாக கொண்டாடுகின்றனர். விழாவுக்கு நூறு பேரை அழைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...