Saturday, 27 May 2017

கொலையில் முடிந்த தற்கொலை: கோர்ட் "பரபர" தீர்ப்பு


அலாஸ்கா : அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தை சேர்ந்தவர் விக்டர் சிப்சன் (21). இவர் தனது பெண் தோழி பிரிட்டனி மே ஹாக் (22) உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். குண்டு, இவரது மண்டை ஓட்டை துளைத்து, மறுபக்கம் வெளியேறி, ஹாக்கின் உடலில் பாய்ந்தது. உடனடியாக, இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், ஹாக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மண்டை ஓட்டினை குண்டு துளைத்திருந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் சிப்சன் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது.இதனிடையே, கோர்ட்டில் ஆஜரான சிப்சனை, நீதிபதிகள் வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டனர். வேண்டுமென்று அவர் ஹாக்கை கொல்லவில்லை என்றும், தற்கொலை முயற்சியின்போது தவறுதலாக அவர் மீது குண்டு பாய்ந்து இறந்துள்ளார் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.இதில் சிப்சன் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால், அவருக்கு 99 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...