பெய்ஜிங்: அருணாச்சலப் பிரதேசத்தின் உள்கட்டமைப்பு விவகாரங்களில் இந்தியா கவனமாக இருக்க வேண்டும் என சீனா எச்சரித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் அசாம் மாநிலத்தை அருணாச்சல பிரதேசத்தின் எல்லையோடு இணைக்கும் வகையில் 9.15 கிலோ மீட்டர் நீளமான பாலத்தை திறந்துவைத்தார்.
1962ல் இந்தியா-சீனா இடையே நடந்த எல்லைப் போரில், சீனா பெருமளவில் ஆக்கிரமித்த பகுதிகள் கொண்ட அருணாச்சல பிரதேசத்தை அசாமுடன் இந்த நீண்ட பாலம் இணைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அசாம் மாநிலம் குவாஹட்டியில் உள்ள சாதியா என்ற இடத்திலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் இட்டாநகரிலுள்ள தோலா இடையே பிரம்மபுத்திரா, லோஹித் ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட இந்த பாலத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என கூறும் சீனா இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, எல்லை பிரச்னையில் இறுதி முடிவு வரும் வரை இந்தியா இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் அமைதியான போக்குடனும் எச்சரிக்கையுடனும், கட்டுப்படுத்தப்பட்ட அணுகுமுறையுடனும் இந்தியா இருக்கும் என நம்புவதாக கூறியுள்ளது.

No comments:
Post a Comment