ஜகார்தா: இந்தோனேஷியாவின் தென் கிழக்கு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.9 ஆக பதிவாகியுள்ளது.
இந்தோனேஷியாவின் தென்கிழக்கே சுலேவாசிய தீவில் உள்ள பாலு தீவு பகுதியில் கடலுக்கு அடியில் 130 கி.மீ. ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. உயிர் சேதம் குறித்து தகவல்கள் தெரியவில்லை.

No comments:
Post a Comment