ஜகார்த்தா: இந்தோனேஷியா எரிமலையில் இந்திய தேசிய கொடியை பறக்க செய்து ஐதராபாத் இளைஞர் சாதனை படைத்துள்ளார். ஐதராபாத்தை சேர்ந்தவர் சாய் தேஜா. இவர் இந்தோனேஷியா சென்று அங்குள்ள எரிமலையில் இந்திய தேசிய கொடியை பறக்க செய்து சாதனை படைத்துள்ளார். தீக்குழம்புகளை கக்கி கொண்டிருக்கும் டுகோனு எரிமலை பகுதிக்கு தைரியமாகச் சென்று அதனை வீடியோவில் பதிவு செய்திருக்கிறார் சாய் தேஜா.
இந்தோனேஷியா சென்ற சாய் தேஜா உள்ளூர் மக்களின் உதவியோடு எரிமலைக்கு அருகே சென்று இந்தியாவின் தேசிய கொடியை பறக்க செய்தார். இதுகுறித்து சாய் தேஜா கூறியதாவது: வாழ்வில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்த தனக்கு இந்த பயணம் மனநிறைவை அளித்துள்ளது. மேலும் அடுத்து எந்த எரிமலைக்கு செல்லலாம் என ஆய்வு செய்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment