தமிழில் அதிக பொருட் செலவில் உருவாக இருக்கும் சங்கமித்ரா படத்தில் இருந்து நடிகை ஸ்ருதிஹாசன் வெளியேறியுள்ளார்.
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தை இயக்குனர் சுந்தர் சி. இயக்குகிறார். இதில், நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், சங்கமித்ரா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பதாக இருந்தது.
இப்படத்திற்காக ஸ்ருதிஹான் கடந்த சில நாட்களாக வாள் பயிற்சி மற்றும் சண்டை பயிற்சி என அனைத்தையும் கற்று வந்தார். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடந்த கேன்ஸ் படவிழாவில் கொண்டாடப்பட்டது. அதில் ஸ்ருதிஹாசனும் கலந்து கொண்டார்.
இந்தப் படம் தன்னுடைய கனவு படம் எனவு, இந்திய சினிமாவை உலக அளவில் பேச வைக்கும் படமாக இருக்கும் என சுந்தர் சி கூறியிருந்தார். இந்நிலையில், இப்படத்திலிருந்து நடிகை ஸ்ருதிஹாசன் விலகி விட்டதாக இன்று செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே, அவருக்கு பதிலாக வேறொரு நடிகை இப்படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

No comments:
Post a Comment