Friday, 2 June 2017

பிலிப்பைன்ஸ் நட்சத்திர விடுதியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் 36 பேர் உயிரிழப்பு



பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நட்சத்திர விடுதிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவன் தனக்குத்தானே தீவைத்து வெடிக்க செய்ததில் அந்த கட்டிடம் தீப்பற்றி எரிந்தது. நட்சத்திர விடுதியில் அதிகாலை வேலையில் முகமூடி அணிந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. உடனே நட்சத்திர விடுதியை சுற்றி பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். நட்சத்திர விடுதியில் துப்பாக்கி சத்தமும் அலறல் சத்தமும் கேட்டதாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர். 

ஆனால் வெளிநாட்டை சேர்ந்த ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன் தீவைத்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறை எண் 510-ல் தீயில் கருகிய நிலையில் அவனது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விடுதிக்குள் இருந்து 36 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. புகைமூட்டத்தால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதே உயிரிழப்புக்கு காரணமாகும். இது தீவிரவாதிகளின் தாக்குதல் இல்லை என்றும் கொள்ளையடிப்பதற்காக மர்ம நபர் ஓட்டலுக்குள் நுழைந்திருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள அந்த மர்ம நபரின், புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். 

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...