Monday, 5 June 2017

புளோரிடா மாகாணத்தில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச் சூடு.. 5 பேர் பலி.. சுட்டவரும் சுட்டுக்கொலை

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அந்த மர்ம நபரும் உயிரிழந்தார்.

புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோவின் கிழக்கு பகுதியில் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதிக்குள் புகுந்த மர்மநபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பதிலடியாக திருப்பிச் சுட்டதில் அந்த மர்ம நபர் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி ஊடங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சம்பவத்திற்கு தீவிரவாத தொடர்பு இல்லை என்றும் தொழில் போட்டி காரணமாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆர்லாண்டோ நகர நைட்கிளப்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 50 பேர் பலியாகினர். 53 பேர் படுகாயம் அடைந்தனர்.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...