Monday, 5 June 2017

இந்திய-சீன எல்லைப் பிரச்சனை: பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு சீனா வரவேற்பு

பெய்ஜிங்: இந்திய-சீன எல்லைப் பிரச்சனை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது.


ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய 4 நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் பேசும் போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை உள்ளது உண்மை தான். ஆனால், கடந்த 40 வருடங்களில், எல்லை பிரச்சனை காரணமாக ஒரு துப்பாக்கி குண்டு கூட வெடிக்கப்படவில்லை" என்று பேசினார்.

இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹூவா கூறுகையில், "இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ள எல்லைப் பிரச்சனை பற்றிய நேர்மறையான கருத்தினை கவனித்தோம். அதனை நாங்கள் வரவேற்கிறோம். எல்லை பிரச்சனை பற்றிய கேள்விக்கு இருநாடுகளின் தலைவர்களும் முறையான கவனம் செலுத்தி உள்ளனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் சந்தித்துக் கொண்ட போது தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்" என்றார்.

இருதரப்பு ஒட்டு மொத்த உறவுகளையும் பேணிக் காப்பதிலும்,இரு தரப்பினரின் நலன்கள் மற்றும் பொதுவான வளரச்சியை கருத்தில் கொண்டும் கூட்டு ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியா, என்.எஸ்.ஜி.யில் உறுப்பினர் ஆவதற்கு, சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இதுகுறித்து கேட்டபோது தற்போது என்.எஸ்.ஜி.யில் உறுப்பினராகும் விவகாரம் புதிய சூழ்நிலையில் உள்ளதாகவும், பாரபட்சமற்ற உலகளாவிய ரீதியிலான தீர்வை அடைய பல ஆலோசனைகளை வழங்க சீனா உதவுகிறது என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...