Monday, 5 June 2017

வடகொரியாவால் ரஷ்யாவுக்கு அச்சுறுத்தல்

மாஸ்கோ: வடகொரியாவின் அணுஆயுத சோதனைகள், ரஷ்யாவுக்கான நேரடியான அச்சுறுத்தல் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.வடகொரியாவின் அணுஆயுத சோதனைகள், உலக நாடுகள் பலவற்றை கவலையடையச் செய்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் வடகொரியாவின் மீது பொருளாதார தடைகளை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.இந்த நிலையில் வடகொரியாவின் அணுஆயுத சோதனைகள் தங்களுக்கான நேரடி அச்சுறுத்தல் என்று ரஷ்யா கூறியுள்ளது.ரஷ்ய பாதுகாப்புத் துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது: வடகொரியாவின் அணுஆயுத ஏவுகணை சோதனைகள் வெறும் சோதனைகள் மட்டுமல்ல. அது எச்சரிக்கையின் அறிகுறி. ரஷ்யாவுக்கான நேரடியான அச்சுறுத்தல், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...