Monday, 5 June 2017

வடகொரிய நிறுவனங்களுக்கு தடை

நியூயார்க்: வடகொரியாவின் அணு ஆயுத திட்டத்துடன் தொடர்புடைய 15 தனி நபர்கள், 4 நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.வடகொரியா அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனையை தொடர்ந்து நடத்துகிறது. இதற்காக அந்த நாட்டின் மீது ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் ஏற்கனவே 6 முறை பொருளாதார தடை விதித்தது.இந்நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இந்த சோதனையுடன் தொடர்புடைய வெளிநாட்டு உளவுப் பிரிவு தலைவர் உட்பட 15 தனி நபர்கள் மற்றும் 4 நிறுவனங்களை பொருளாதார தடை பட்டியலில் சேர்க்க வகை செய்யும் தீர்மானம் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்டது. இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தில், வடகொரியா மீது மேலும் கடுமையான பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இடம் பெற்றிருந்தது. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததால் வடகொரியா மீது புதிய தடை எதுவும் விதிக்கப்படவில்லை.அமெரிக்க துாதர் நிக்கி ஹாலே கூறும்போது, "வடகொரியா இனிமேலாவது ஏவுகணை சோதனை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்," என்றார்.தடை விதிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியாது. மேலும் அவர்களது சொத்துகள் முடக்கப்படும். வட கொரியாவைச் சேர்ந்த 39 தனிநபர்கள் மற்றும் 42 நிறுவனங்களுக்கு ஏற்கெனவே இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...