Saturday, 3 June 2017

தாய்நாடு கோருவதற்கு முன்னர் தமது நிலங்களை பாதுகாக்க வேண்டும்;சம்பிக்க


தாய்நாடு கோருவதற்கு முன்னர் தமது நிலங்களை பாதுகாக்க வேண்டும்;சம்பிக்க க்கான பட முடிவு

எதிர்வரும் 50 வருடங்களில் யாழ்ப்பாணம் அரை பாலவனமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.தாய்நாட்டு கோரிக்கைக்காக கூச்சலிடுவதற்கு முன்னர் தமது நிலங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், தற்போது யாழ்ப்பாணத்தை மூலோபாய முறையில் அபிவிருத்தி செய்து அந்த சூழலை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.கால்வாய்கள் மற்றும் நீர்வழிகளை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுவது சம்பந்தமாகவும், நகர பகுதிகளில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுவது சம்பந்தமாகவும் அவர் இதனைக் கூறியுள்ளார்.சரியான சூழல் மதிப்பீடுகள் இன்றி மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் காரணமாக அனர்த்தங்கள் அதிகரித்துள்ளதாகவும், தெற்கு அதிவேக வீதி அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான பிரதான காரணமாக இருப்பதாகவும் அமைச்சர் இதன்போது கூறினார்.அத்துடன் பேரழிவுகள் ஏற்படுவதற்கு முன்னர் எச்சரிக்கை விடுக்க முடியாமல் போவது பாரிய பிரச்சினையாகும் என்றும், மக்கள் பாதுகாப்பிற்காக நிலையான மக்கள் மையத்தை கட்டியெழுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...