மாஸ்கோ: ஒரு மனிதன் எப்படியிருந்தால் எனக்குப் பிடிக்குமோ, அப்படியே இருக்கிறார் டிரம்ப் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புகழ்ந்துள்ளார். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், அவரை விரைவில் சந்திக்க இருப்பதாகவும் புதின் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப் குறித்து விளாடிமிர் புதின் நேற்று பேசியதாவது: எனக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. எளிமையாக, நேர்மையாக எதையும் வெளிப்படையாகக் கூறும் நபரையே எனக்குப் பிடிக்கும்.
அப்படிப்பட்ட நபராக அமெரிக்க அதிபர் டிரம்ப் இருக்கிறார். எனக்குப் பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதையும் கடந்து, அவருடன் தனிப்பட்ட முறையிலும் அரசியல்ரீதியாகவும் நல்ல தொடர்பை வளர்த்துக்கொள்ளவே விரும்புகிறேன். இதற்காக அவரை விரைவில் சந்திப்பேன். மேலும் டிரம்ப் போன்றதொரு சிறந்த நிர்வாகிக்கு யாரும் எந்தவொரு அறிவுரையும் வழங்கத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார். அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்றதற்கு ரஷ்யா உதவியதாக அமெரிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் வேளையில் டிரம்ப்பை புதின் புகழ்ந்து இருப்பது அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment