Friday, 28 September 2018

அமெரிக்காவை எதிர்க்குமா இந்தியா? அதீத நம்பிக்கையுடன் ஈரான்

Image result for அமெரிக்காவை எதிர்க்குமா இந்தியா
2015 ஆம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா தனது ஆட்சிக் காலத்தில் ஈரான் உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுடன் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால், அவரது பதவிக்காலம் முடிந்து டிரம்ப் பதவியேற்றதும் இது பைத்தியக்காரத்தனமான ஒப்பந்தம் என்று கூறி அதில் இருந்து விலகினார். மேலும், ஈரான் மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தார். மேலும், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா தரப்பில் மிரட்டலும் விடப்பட்டது. இந்நிலையில், இன்று ஈரான் இந்தியாவின் நிலை குறித்து தெரிவித்துள்ளது பின்வருமாறு, கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் எங்களுடைய இந்திய நண்பர்கள் பொருளாதார ரிதியாக தொடர்ந்து எங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள். இதே கருத்தைதான் இந்திய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். எரிபொருளை பொறுத்தவரை ஈரான் எப்போது இந்தியாவின் நம்பகமான ஆதார சக்தியாக இருந்திருக்கிறது. ஈரானுடனான உறவை விரிவாக்கவே இந்தியா விரும்புகிறது என தெரிவித்துள்ளது. ஏற்கனவே, அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளையும் மீறி ஈரானுடன் கச்சா எண்ணெய் உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபட இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இப்போது, இந்திய அரசு இது குறித்து என்ன முடிவெடுக்கும் என தெரியவில்லை. ஏற்கனவே, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால், இன்னும் ஒரே மாதத்தில் இந்தியாவின் முடிவு பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால், இந்த மாற்றம் நன்மைக்கானதா என்பதே சந்தேகம்.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...