Tuesday, 2 October 2018

உங்களுக்கு விருப்பமான நடிகையை போல பொலிவான சருமம் வேண்டுமா? அதற்கு தேவையான பொருட்கள் உங்களது வீட்டிலேயே உள்ளன

நயந்தாராவின் மாசுமருவற்ற நிறம், அனுஷ்கா செட்டியின் பொலிவான சருமம் மற்றும் சுருதி ஹாசனின் பளிச்சென்ற தோற்றம். இது போல நமக்கும் வாய்க்குமா என்று ஏங்குபவர்கள் பலர். ஒரு வேளை மேக்கப், காஸ்ட்லியான காஸ்மெட்டிக் சிகிச்சைகள் அல்லது கேமராவின் யுக்தி தான் அவர்களின் அழகுக்கு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் கூட உங்களுக்கு தோன்றலாம்.
ஆனால் உண்மை என்னவென்றால், கோலிவுட்டின் முன்னணி நடிகைகள் தங்களது சரும பரமரிப்புக்கான கவனிப்புகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு தங்களது அழகை பேணி வருகின்றனர். பெரும்பாலானவர்கள் ஜிம்முக்கு சென்றும் ரெகுலராக டீடாக்ஸ் செய்தும் கொள்கின்றனர்.
மேலும், பெரும்பாலான ஸ்டார்கள் இயற்கை பராமரிப்பு நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர். இந்த கோலிவுட் நடிகைகள் சிறந்த தென்னிந்திய பாரம்பரியத்தில் வளர்ந்துள்ளதால் அதனை தங்களது தினசரி வாழ்வில் தவறாது கடைபிடித்து வந்து தங்களது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக பேணுகின்றனர்.
உதாரணத்துக்கு அசினை எடுத்துக் கொள்வோம், கஜினி நடிகையான இவர் ஆயுர்வேதத்தை முழுவதாக நம்புவதாகவும் ஜங்க் மற்றும் சோடா அடங்கிய பானங்களை அறவே தவிர்த்துவிடுவேன் என்றும் கூறியுள்ளார். மேலும் தனது மாசுமறுவற்ற சருமத்துக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய சரியான டயட் மற்றும் வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவி கிளென்சிங் செய்வது தான் காரணம் என்று கூறியுள்ளார்.
பாகுபலி 2 வில் தேவசேனாவாக நடித்துள்ள அனுஷ்கா தனது சருமத்தை மிருதுவாக வைக்கவும் முகம் பொலிவுடன் திகழவும் யோகாவை முழுமையாக நம்புவதாக கூறியுள்ளார். நடிக்க வரும் முன் யோகா டீச்சராக பணியாற்றியுள்ள இவர் முட்டி போன்ற இடத்தில் சருமம் கருமையாக இருப்பின் அதனை போக்க எலுமிச்சை சாறு பயத்தம் மாவினை பூசினால் கருமை குறைந்துவிடும் என்று ஆலோசனை கூறுகிறார்.
பெரும்பலான தாரகைகள், தங்களது அம்மா மற்றும் பாட்டிகள் செய்து வந்த அழகு பராமரிப்புக்களை தொடர்வதாகவும், அவை இயற்கையானவை மற்றும் பின்விளைவுகள் அற்றவை என்றும் கூறியுள்ளனர்.
சமந்தா ருத் பிரபு தனது அழகான முகம் மற்றும் மேனியை எப்போது ஈரப்பதத்துடன் வைத்திருக்க அடிக்கடி நீர், இள நீர் மற்றும் ஃப்ரெஷான ஜூஸ்களை அருத்துவதாக கூறியுள்ளார். தினசரி க்ளீனிங், டோனிங்க் மற்று மாயிஸ்சரைசிங் ஆகிய நடைமுறைகளை எவ்வளவு பிசியாக இருந்தாலும் கடைபிடித்து விடுவேன் என்று அவர் மேலும் கூறியுள்ளார். வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் கண்டிப்பாக சன் ஸ்கிரீன் பூசி செல்லும் வழக்கத்தையும் கடைபிடிப்பதாக இவர் கூறியுள்ளார்.
பெரும்பாலான நமது கோலிவுட் குவீன்கள், நமது சமையலறையில் காணப்படும் இயற்கை பொருட்கள் எவ்வாறு நமது சருமத்துக்கு சிறந்தவை என்ற புகழையே பாடுகின்றனர். சுருதிஹாசன் செய்வதை போல நமது முகத்தை அடிக்கடி கழுவுவதன் மூலம் அதனை சுத்தமாக எண்ணெய் பிசுக்கின்றி வைத்துக் கொள்ள முடியும். இயற்கையிலேயே வேம்பின் நற்குணம் அடங்கிய Hamam சோப்பை போல வேறு எது மிருதுவாக நமது சருமத்தை சுத்தம் செய்யக்கூடும்? இயற்கையிலேயே மாசுமறுவற்ற சருமம் கொண்ட சுருதிஹாசன் ஒரு பேட்டியில், தான் எப்போதும் இயற்கையான மற்றும் வீட்டில் கிடைக்கும் பொருட்களை தான் விரும்புவேன் என்று கூறியுள்ளார். சூரிய ஒளியினால் சருமம் பொலிவிழக்கும் போதெல்லாம் கெமிக்கல் சிகிச்சைகளை மேற்கொள்ளாமல், எலுமிச்சை, தக்காளி மற்றும் தேன் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி பொலிவு பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்னும் சொல்லப்போனால் சருமத்துக்கு இதமான, நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்ட மற்றும் விலை குறைவான பொருட்கள் நமது சமையலறையிலேயே உள்ளன. அவற்றை பயன்படுத்தி நீங்கள் பெரிதும் விரும்பும் நயன்தாரா, சமந்தா அல்லது சுருதியை போன்ற களங்கமற்ற சருமத்தை பெற முடியும்! மஞ்சள் மற்றும் பயத்தம் மாவு ஆகியவை சருமத்துக்கு மிகவும் ஏற்றவை, அது போல தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெய் ஆகிய எண்ணெய்களும் நன்மையளிக்கக் கூடியவையாகும்.
வேப்பெண்ணெய் குறிப்பாக அதன் இதமளிக்கும் குணத்துக்காக பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது - வேப்பெண்ணெய் விட்டமின் ஈ மற்றும் ஃபேட்டி ஆசிட் ஆகியவற்றை அதிகம் கொண்டுள்ளதால் இன்பெக்க்ஷன்களை தடுப்பதுடன் சருமத்தில் உள்ள களங்கங்களை நீக்கி சரும துவாரங்களை இறுக்கமாக்குகிறது.. பருக்களை ஏற்படுத்தும் பேக்டீரியாக்களை எதிர்த்து போராடி பருக்களால் ஏற்ப்படும் வடுக்களை தடுக்கிறது. பன்முக தன்மை கொண்ட வேப்பெண்ணெய் சரும பிக்மெண்டேஷனுக்கு காரணமான மெலனின் உற்பத்தியையும் குறைக்கிறது.
சமையலறை பொருட்களை அல்லது இயற்கை பொருட்கள் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவது நம்மை சூப்பர் ஸ்டாராக உணர வைக்கும் ஒரு சுலபமான வழியாகும்.
இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...