தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்ஸர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் மட்டுமில்லாமல் ரஜினிகாந்தின் பேட்ட, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.
இன்று மாலை சென்னையில் நடைபெற உள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கோரிக்கைக்கு இணங்க ரஜினி இப்படியொரு முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மை என்ன என்பது உறுதியாக தெரியவில்லை. .
அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சர்கார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டால் முருகதாஸ் மற்றும் ரஜினி இணைய உள்ள அடுத்த படத்தின் அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. .


No comments:
Post a Comment