Wednesday, 24 May 2017

அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகளின் பத்தாவது ஆண்டு நிறைவு நாள்


டேரியன்: அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகளின் பத்தாவது ஆண்டு நிறைவு நாள், இல்லினாய் மாகாணம், டேரியன் நகரில் உள்ள இன்சுடெல் பள்ளியில் நடைபெற்றது. இதில் இடேரியன், இடெசுபிளெய்ன்சு, கெர்ணி, மில்வாக்கி, நேப்பர்வில் மற்றும் சாம்பர்க், ஆகிய பலவேறு தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் என 600க்கும் பங்கேற்றனர். மாணவர்கள் திருக்குறள், ஆத்திச்சூடி, தமிழ்த்தாய் வாழ்த்து பாட, பாபு வரவேற்றார். திருக்குறள் ஒப்பித்தல், சொல்லாட்சி, சொற்சிலம்பம், சொல் ஒன்று-பொருள், பழமொழி போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. ஒளவையின் "ஆத்திச்சூடி ஆள வைக்கும்" என்ற இடெசுபிளெய்ன்சு பள்ளியின் மாணவர்களின் நாடகம், பாரதியார் மற்றும் பாரதிதாசனின் பாடல்கள், இடேரியன் தமிழ்ப்பள்ளியின் "கோடி பெறும்" நாடகம், தமிழோடு இணைந்த பிறந்த நாள் பாடல், நேப்பர்வில் மாணவர்களின் "சிலப்பதிகாரம்" நாடகம், "மூவேந்தர்" என்ற சாம்பர்க்கு தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நிகழ்வு ஆகியவை அரங்கத்தினரை அசர வைத்தது. தமிழ்க் கலைகளான கோலாட்டம், கும்மியாட்டம் கண்களுக்கு விருந்தாகின. முக்கிய போட்டியான திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் அதிகப்படியான திருக்குறள் கூறிய மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்க்கும், ஆசிரியர்க்கும் பரிசுகள் தரப்பட்டது.

பர்வீன் சுல்தானாவின் 'தாய்த் தமிழ்' பற்றிய பதிவுப்பேச்சு காணொளி வழியாக தமிழ் உணர்வை துண்டுவதாக அமைந்தது.- தினமலர் வாசகி பிரியா பாலச்சந்தர்

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...