Thursday, 8 June 2017

13 வருடங்களுக்கு பின் போலீஸ் கேரக்டரில் ரீஎண்ட்ரி ஆகும் மந்த்ராபேடி


சிம்பு நடித்த 'மன்மதன்' படத்தில் மனநல டாக்டராக நடித்திருந்த மந்த்ராபேடியை யாரும் மறந்திருக்க முடியாது. இவர் நடித்த படங்களை விட கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பும் முன் இவர் கொடுக்கும் கமெண்ட்ரியை கேட்க என்றே ஒரு கூட்டம் காத்திருக்கும். நேரலையில் படுகவர்ச்சியாக தோன்றும் ஒருகாலத்தில் மந்த்ராபேடி இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் 

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது ஒரு தமிழ்ப்படத்தில் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ், சுரபி நடிக்கும் 'அடங்காதே' படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து வரும் மந்த்ரா தனது கேரக்டர் குறித்து கூறுகையில், 'நான் இந்த படத்தின் முன்னணி நடிகையாக இல்லை என்றாலும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றேன்.நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் மீண்டும் நடிப்பில் சந்தோஷம் என்று கூறினார். 

சண்முகம் முத்துசாமி இயக்கி வரும் இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். மேலும் தம்பி ராமையா, பிளேட் சங்கர் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை ஸ்ரீக்ரீன் புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

No comments:

Post a Comment

2 killed, three injured after Israeli missiles hit air base in Syria's Homs

Israeli missiles hit a main air base in Syria's Homs province on Sunday, killing two servicemen and injuring three others, the Syrian ar...